பொது மக்களுக்கு பிரச்சினை பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையிடம் சென்று புகார் வழங்கி அதற்கு தீர்வு காணலாம். ஆனால் இங்கே ஒரு காவல்துறையைச் சேர்ந்தவரே பள்ளி மாணவிக்கு புது இடத்தில் தொல்லை கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசமான இடத்தில் நடைபெற்று உள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தின் லக்னோ மாவட்டத்தில் இருக்கின்ற சதார் பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் ஷஹ்தத் அலி. இவர் அந்த பகுதியில் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவி ஒருவரை தன்னுடைய ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து சென்று அவருக்கு தொந்தரவு கொடுக்கும் வீடியோ வந்து சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் காவலர் மிதிவண்டியில் செல்லும் மேகத்திலேயே தன்னுடைய ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு மாணவியை பின் தொடர்ந்து செல்கிறார். மாணவியை விடாமல் அவரிடம் பேசிக் கொண்டே செல்கிறார் அந்த போலீஸ்காரர் இதை பின்னால் செல்லும் ஒரு பெண் கவனித்து வீடியோ எடுத்து ஆதாரமாக வைத்துக் கொண்டார்.
அதன் பின் அந்த காவலரை இடைமறித்து யார் நீங்கள்? இந்த மாணவிக்கு ஏன் தொல்லை கொடுக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு ஏதேனும் தெரிவித்து அந்த காவலர் சமாளிக்க முயற்சித்துள்ளார். அதன் பிறகு காவலர் அணிந்திருந்த தலைக்கவசத்தை அகற்ற சொல்லி அடையாளத்தை பார்த்துக் கொண்டார் அந்த பெண்மணி. அதோடு காவலர் ஓட்டிய வாகனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் அதில் பதிவு எண் இல்லை.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய சூழ்நிலையில், லக்னோ மாவட்ட காவல்துறை அதிரடியாக விளக்கை மேற்கொண்டு இருக்கிறது மாணவியின் பெற்றோர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு வந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
அதோடு, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த காவலர் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு இதுபோன்ற தொல்லைகளை கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார்கள் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.