fbpx

திரைப்பட பாணியில் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட பெண் உயிரோடு வந்த அதிசயம்! செய்யாத தவறுக்கு சிறையில் வாடிய அப்பாவி!

நடிகர் சரத்குமார் நடித்த ரிஷி என்ற ஒரு திரைப்படத்தில் சரத்குமார் வில்லனை கொலை செய்து விட்டதாக தெரிவித்து, அவருக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும்.ஆனால் தான் அந்த கொலையை செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்காக காவல்துறையிடம் இருந்து தப்பித்து தான் குற்றமற்றவர் என்ற ஆதாரத்தை தேடி கண்டுபிடிப்பதற்காக சரத்குமார் முயற்சிப்பார்.

இறுதியில் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நபரை சரத்குமார் கொலைகாரர் என்று தீர்மானித்து சிறை தண்டனை வழங்கிய அந்த நீதிபதி முன்பே கொலை செய்ய முயற்சி செய்வார்.

அப்போது காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் இவரைத்தான் 7 வருடங்களுக்கு முன்பே ரிஷி கொலை செய்துவிட்டார் என்று அவரை சிறையிலடைக்க உத்தரவிட்டீர்களே, தற்போது மீண்டும் அவர் ரிஷியால் கொலை செய்யப்பட்டால் மறுபடியும் அவருக்கு தண்டனை வழங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பி நீதிபதியையே வாயடைக்க வைப்பார்.அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

அதாவது, கடந்த 2015 ஆம் வருடம் உத்திர பிரதேச மாநிலத்தின் அலிகாரை சேர்ந்த ஒரு 17 வயது சிறுமி ஹஸ்ரத் அருகே இருந்த கோயிலுக்கு சென்று பின்பு அங்கிருந்து காணாமல் போய்விட்டார். அதனடிப்படையில் கடந்த 2015 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி 17 வயது சிறுமியின் தந்தை அலிகாரில் இருக்கின்ற காவல் நிலையத்தில் தன்னுடைய மகனை காணவில்லை என்று புகார் வழங்கியிருந்தார்.

அந்த புகாரினடிப்படையில் 363 ,366 என்ற இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த காவல்துறையினர், காணாமல் போன சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். சில நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை அடிப்படையாகக் கொண்டு, விசாரணை நடத்தியதில், அந்த சடலம் காணாமல் போன 17 வயது சிறுமி தான் என்று தெரிவித்ததோடு, அந்த சிறுமியை விஷ்ணு என்பவர்தான் கொலை செய்தார் என்று தெரிவித்து, அந்த நபரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அலிகார் சிறையிலடைக்கப்பட்டார்.

இதன் காரணமாக, கடந்த 7 வருட காலமாக விஷ்ணு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில்தான் அந்த வழக்கில் புதிதாக ஒரு ஆதாரம் கிடைத்தது. திரைப்படத்தையே மிஞ்சுமளவிற்கு அந்த ஆதாரம் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஏனென்றால் இறந்துவிட்டதாக நினைத்த அந்த சிறுமி 7 வருடங்களுக்கு பிறகு உயிருடன் இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

அந்த பெண் உயிருடன் இருப்பதுடன் இல்லாமல் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர் 17 வயதாக இருந்தபோது கோவிலுக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு தன்னுடைய காதலனுடன் அட்ரஸ் மாவட்டத்திற்கு ஓடிப்போனார். அந்த பெண் அந்த நேரத்தில்தான் விஷ்ணு கொலை செய்து \விட்டார் என்று கொலைகார முத்திரை குத்தப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனாலும் சிறையிலிருக்கும் விஷ்ணுவின் தாய் தன்னுடைய மகனை குற்றவாளி என்று நிரூபணம் செய்ய நீதிமன்றம், காவல் நிலையம் என்று பலமுறை சென்று வந்தும் எந்த விதமான பலனும் கிடைக்காததால் அவரே களத்தில் இறங்கி ஆதாரத்தை திரட்ட தொடங்கினார். ஆகவே மரணமடைந்ததாக நினைத்த அந்த பெண் ஆக்ராவில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்ததை சில இந்து அமைப்பின் உதவியுடன் தெரிந்து கொண்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அலிகார் காவல் துறையை சார்ந்தவர்களை சந்தித்து நடந்ததை சொன்னவுடன் ஹத்ராஸ் கேட் பகுதியில் இருந்த அந்தப் பெண்ணை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டாம் எனவும், வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று சொல்லியும் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்தினர் விஷ்ணுவின் தாயிடம் சமரச பேச்சை ஆரம்பித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Post

நெருங்கும் ’மாண்டஸ்’ புயல்..!! பொதுமக்களே கவனம்..!! சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு..!!

Thu Dec 8 , 2022
’மாண்டஸ்’ புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில், வங்கக்கடல் பகுதியில் நிலவியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது புயல் சின்னமாக வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. […]

You May Like