fbpx

2K கிட்ஸுகளுடன் ரகளை பன்னும் வெதர்மேன்.!

தமிழகத்தில் தற்போது காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில நாட்கள் பள்ளி, கல்லூரி போன்றவைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயமுத்தூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சிவகங்கை, சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர கனமழை பெய்து வருகிறது.

அந்த மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இச்சூழலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று வெதர்மேன் பிரதீப் ஜானிடம் பள்ளி மாணவர்கள் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் கேட்டு வருகின்றனர். இதற்கு ப்ரதீப் நகைச்சுவையாக பதில் அளித்து வருகிறார்.

வானிலை அறிக்கையால் ஏமாற்றமடைந்த பள்ளி மாணவர்கள், பதிவுகளில், ‘பள்ளி மாணவர்களது வில்லன் பிரதீப் ஜான்’ என்பது போன்ற சில பின்னூட்டங்களை இட்டு வந்துள்ளனர். இதை சுட்டிக் காட்டும் வகையில் பதிவிட்டுள்ள பிரதீப் ஜான், தற்போதைய 2K கிட்சுகள் மிகவும் மோசம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் தன்னிடம் விடுமுறை பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என்றும், ஆட்சியர்களின் வீடுகளின் முன்பே டேங்கர் லாரிகள் வைத்து அதன் மூலம் தண்ணீர் அடித்தால், அவர்கள் விடுமுறை அளிப்பார்கள் எனவும் நகைச்சுவையாக பதிவேற்றியுள்ளார்.

Rupa

Next Post

10 ஆம் வகுப்பு மாணவி.. 3 வது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை முயற்சி.!

Fri Nov 4 , 2022
செங்கல்பட்டு மாவட்டம் பகுதியில் ஊரப்பாக்கம் பாலாஜி என்ற நகரில் வசித்து வருபவர் நசீமா (16). அதே பகுதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.மேலும் தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் நிலையில், மாணவி நசீமா, சென்ற இரு மாதங்களாகவே பள்ளியில் சரிவர படிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி நசீமா, சரியாக படிக்கவில்லை என்று […]

You May Like