fbpx

பான் கார்டு எடுத்து விட்டீர்களா? இதை செய்தால் போதும் சில மணி நேரங்களில் டிஜிட்டல் பான் கார்டு உங்கள் கையில்!

கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது. சர்வ சாதாரணமாக, ஒரே இரவில் இப்படியான மிகப்பெரிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதால் கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல் கூலி தொழிலாளர்கள் வரை அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

அதன் பிறகு பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக நாட்டில் உள்ள வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் பணங்களை வைத்துக் கொண்டிருந்த சில கார்ப்பரேட் முதலைகள் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் தீயிட்டு எரித்த சம்பவமும், நடுரோட்டில் வீசி சென்ற சம்பவமும் நிகழந்தனர்.

மத்திய அரசு இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆகவே இதை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக எல்லோரும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று தெரிவித்தது.

அதன்படி வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் அதற்கு பான் கார்டு அவசியம் என்ற நடைமுறையை வங்கிகள் மூலமாக அமல்படுத்தியது மத்திய அரசு.அதுவரையில் பான் கார்டு பெரிய பெரிய முதலாளிகளிடம் மட்டுமே இருந்தது, ஆனால் இந்த அறிவிப்பிற்கு பின்னர் சாதாரண மக்கள் வரையில் பான் கார்டு எடுக்க தொடங்கிவிட்டார்கள்.

இதனால் தான் தற்போது நாட்டில் ஆதார் கார்டை போலவே பான் கார்டும் ஒரு முக்கியமான ஆவணமாக மாறிப்போனது. வங்கி கணக்குகளை திறப்பது உட்பட பல முக்கிய விவகாரங்களுக்கு பான் கார்டு அவசியமாக இருக்கிறது. பான்கார்டு மூலமாக வருமான வரித்துறை பொதுமக்களின் நிதி விவரங்களை கண்காணித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பான் கார்டு பல அரசாங்க திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதால் இதை பொதுமக்கள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். டிஜிட்டல் பான் கார்டு சில மணி நேரங்களில் பெற பினோ பேமென்ட் வங்கி ஒரு புது சேவையை தொடங்கியுள்ளது.

இந்த சேவைக்கு தங்களுடைய ஆதார் விவரங்கள் மட்டுமே போதுமானது, உங்களுடைய ஆதார் அங்கீகாரத்திற்கு பின்னர் எந்த ஒரு பயனாளரும் பினோ வங்கி மையங்களின் உதவியுடன் அவர்களுக்கான பான் கார்டை பெற்றுக்கொள்ளலாம். எந்தவிதமான கூடுதலான ஆவணங்களும் இந்த செயல்முறைக்கு தேவையில்லை என்று கூறப்படுகிறது. கூடுதலாக நுகர்வோருக்கு பிஸிக்கல் மற்றும் டிஜிட்டல் பான் கார்டுக்கு இடையில் விருப்பம் வழங்கப்படும். டிஜிட்டல் பான் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த சில மணி நேரங்களில் தனிநபர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களுடைய டிஜிட்டல் பான் கார்டு அட்டையுடன் கூடிய மின்னஞ்சல் அனுப்பப்படும் என்று அந்த வங்கி தெரிவித்திருக்கிறது.

மேலும் இதில் டிஜிட்டல் பான் கார்டுகள் உலகம் முழுவதும் செல்லும், அத்துடன் ஒவ்வொரு அதிகாரப்பூர்வ நோக்கத்துக்கும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகவே இது குறித்து பொதுமக்கள் எந்த விதமான அச்சமும் அடைய தேவை இல்லை. ஆனாலும் டிஜிட்டல் முறையில் பான் கார்டு பெற விரும்பாமல் பேப்பர் பான் கார்டு பெற விரும்பும் மக்களுக்கும் இந்த வங்கி அதற்கான சேவையையும் வழங்குகிறது. மேலும் ஆதார் அட்டையில் உள்ள தங்களுடைய முகவரிக்கு 4 அல்லது 5 தினங்களில் பான் கார்டு டெலிவரி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Next Post

பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை பெறுவது எப்படி..? வீட்டிலிருந்தே சுலபமாக விண்ணப்பிக்கலாம்..!!

Fri Dec 9 , 2022
இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்று. பிறந்த குழந்தை தொடங்கி வயதான முதியவர்கள் வரை ஆதார் கார்டு என்பது அனைவரது முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. வங்கியாக இருந்தாலும் சரி, அரசு வேலையாக இருந்தாலும் சரி ஆதார் அட்டை தான் முக்கிய ஆவணமாக இருக்கிறது. இந்நிலையில், புதிதாகப் பிறந்த குழந்தைக்கான ஆதார் அட்டையை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். அவை எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். குழந்தைகளுக்கான […]

You May Like