fbpx

தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர்….! வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் மீது புகார் வழங்கிய இளம் பெண்….!

உத்திர பிரதேச மாநிலம் குவாலியரில் 24 வயது இளம்பெண் ஒருவருக்கு ஒரு இளைஞருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. அந்த திருமணத்தின் போது வரதட்சணையாக பெண் வீட்டார் தரப்பில் கொடுத்திருக்கிறார்கள் ஆனாலும் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு கார் வேண்டும் என்று கணவரும், மாமியாரும் கேட்க தொடங்கியதால் பிரச்சனை ஆரம்பித்தது.

இந்த நிலையில் கணவர் தன்னிடம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தியதன் காரணமாக, அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். அப்போது தன்னுடன் கணவர் இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவில் ஈடுபட்டதாக காலநிலையத்தில் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அந்த இளம் பெண் குற்றம் சுமத்தி இருக்கிறார். பெண்ணின் பெற்றோர் கணவருக்கு பலமுறை அறிவுரை வழங்கி அவரை திருத்துவதற்கு முயற்சி செய்தும் அவர் புரிந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் கோஞ்ச் ஜலான் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் குவாலியர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். குற்றம் சுமத்தப்பட்டவர் மீது இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் பலாத்காரம் மற்றும் வரதட்சணை கொடுமை போன்ற வழக்குகள் கடந்த சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கணவரின் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்ததன் காரணமாக, அந்த இளம் பெண்ணை இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்டதாக சொல்லப்படுகிறது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண் தான் தனியாக இருக்கும் போதெல்லாம் மாமனார் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஆனால் அவருடைய கணவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இந்த நிலைமைக்கு அந்தப் பெண் தான் காரணம் என குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கணவனை விட்டு கள்ளக்காதலனுடன் ஓடி வந்த பெண்…..! உல்லாசத்தின் போது ஓயாமல் அழுத குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்….!

Tue May 9 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் மல்லேஷ் (32). இவர் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர் காடாம்பட்டியில் தங்கி செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். அதே செங்கல் சூளையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புதுவடவள்ளியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவருடைய மனைவி கலைவாணி(27) உள்ளிட்டோரும் தங்களுடைய ஒரு வயது பெண் குழந்தையுடன் வங்கி வேலை பார்த்து வந்தனர். இத்தகைய சூழ்நிலையில், கலைவாணியுடன் மல்லேஷுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது இந்த பழக்கம் […]

You May Like