ஒரு மனிதனுக்கு எள்ளளவும் இருக்கக் கூடாத ஒரு பழக்கம் என்றால் அது குடிப்பழக்கமும், சந்தேக புத்தியும் தான். இந்த இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தாலும் கூட அந்த குடும்பம் சின்னாபின்னமாகிவிடும்.
நாட்டின் குடி பழக்கத்தால் தான் விபத்துகள் முதல் பாலியல் வன்கொடுமை வரையில் அனைத்து தவறுகளும் நடைபெறுகின்றனர். ஆனால் இதை அனைத்தையும் தாண்டி இன்னொரு விஷயம் இருக்கிறது.
ஒரு ஆண் தன்னுடைய மனைவியை சந்தேக கண்ணால் எந்த நொடியில் இருந்து பார்க்க தொடங்குகிறானோ அந்த நொடியில் இருந்து அவனுடைய குடும்பத்திற்கு அழிவு தொடங்கிவிட்டது என்று தான் அர்த்தம்.
அந்த வகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள அழிஞ்சி குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் இவர் கட்டிட பணியாளராக இருந்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர் புனிதா அருகில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். ஜெய்சங்கர் அவ்வப்போது குடித்துவிட்டு வந்து தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த விதத்தில், நேற்று முன்தினம் மாலை புனிதா வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அழிஞ்சு குப்பம் பேருந்து நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்த சமயத்தில், அவரை இடைமறித்த அவருடைய கணவர் ஜெய்சங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் புனிதாவை மீட்டு ஆம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனாலும் அங்கே சிகிச்சை பலனின்றி புனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மேல்பட்டி காவல்துறையினர் தப்பிச்சென்ற ஜெய்சங்கரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.