fbpx

சொத்தின் மேல் வந்த ஆசையால் கணவனையும் 2 மகன்களையும் கொலை செய்த பெண்…..! விசாரணையில் அம்பலமான உண்மை……!

ஒரு மனிதனுக்கு கோபத்தை விடவும் மிகப்பெரிய எதிரி ஒன்று இருக்கிறது என்றால் அது ஆசைதான் ஆசை என்பது ஒரு மனிதனுக்கு அளவில்லாமல் போய்விட்டால் அந்த ஆசை குரூர எண்ணத்தை நம்முடைய மனதில் தோற்றுவிக்கும். அந்த குரூர எண்ணம் நம்மை தவறான வழிக்கு அழைத்துச் சென்றுவிடும்.

அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹஜன்வான் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் குப்தா( 40) இவருக்கு திருமணம் ஆகி ஆரவ் மற்றும் ஆரியன் என்ற 2️ மகன்கள் இருக்கிறார்கள் அவதீஷ் குப்தாவின் முதல் மனைவி உயிரிழந்ததை தொடர்ந்து 8 மாதங்களுக்கு முன்னர் நீலம் என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.

இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை இருந்திருக்கிறது. 2வது திருமணத்திற்கு பின்னர் அவதேஷ் குப்தா அவருடைய முதல் மனைவியின் மகன்களும் 2வது மனைவி நீலம் அவருடைய மகளும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த 25 ஆம் தேதி இரவு நீலம் காவல் நிலையத்திற்கு தொலைபேசியின் மூலமாக அழைத்து தன்னுடைய கணவர் மற்றும் மகன்கள் மீது யாரோ கொலை வெறி தாக்குதல் நடத்தி இருப்பதாக புகார் வழங்கினார்.

காவல்துறையினர் இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவதேஷ் குப்தா மற்றும் அவருடைய மகன்கள் ஆரியன், ஆரவ் உள்ளிட்டோர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்தனர்.

இவர்களுடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறை அதிகாரிகள் குப்தாவின் மனைவி மீது சந்தேகித்து விசாரணை நடத்தினர். மனைவியிடம் சுமார் 8 மணி நேரம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மை வெளியானது.

அவதேஷ் குப்தா தன்னுடைய சொத்தை முதல் மனைவியின் இரு மகன்களுக்கு தான் எழுதி வைக்கப் போவதாக கூறி வந்திருக்கிறார் என்பதும், இது 2வது மனைவிக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

மேலும் தன்னுடைய மகளுக்கு சொத்தை கொடுக்காமல் எப்படி ஏமாற்றலாம்? என்று கோபத்தில் இவர்கள் மூவரையும் கொலை செய்துவிட்டால் தன்னுடைய பெயரில் மட்டுமே அனைத்து சொத்துக்களும் வந்துவிடும் என்று சதித்திட்டம் தீட்டி இந்த கொடூர கொலைகளை அவதேஷ் குப்தாவின் 2வது மனைவி நீலம் செய்திருக்கிறார். என்ற உண்மை காவல்துறையினரின் விசாரணை தெரிய வந்தது. மேலும் அவரை கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

Next Post

ஈரோடு இடைத்தேர்தல்.. வாக்குப்பதிவு நடக்கும் போதே பணப்பட்டுவாடா.. தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்..

Mon Feb 27 , 2023
தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சவடி எண் 138, 139-ல் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக அதிமுக குற்றம்சாட்டி உள்ளது.. 2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த டிசம்பர் 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் […]

You May Like