fbpx

ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுவன் கடத்தல்…..! போக்சோவில் கைது செய்யப்பட்ட 33 வயது பெண்….!

ஆண்கள் பெண்களை பணக்காரன் செய்த காலம் எல்லாம் மலை ஏறி போய் தற்சமயம் பெண்கள் ஆண்களை பலாத்காரம் செய்யும் காலம் வந்துவிட்டது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 17 வயது சிறுவனை காதலிப்பதாக தெரிவித்து கன்னியாகுமரி வரையில் கடத்திச் சென்ற 33 வயது பெண்ணை காவல்துறையினர் போகோ சட்டத்தின் கைது செய்திருக்கிறார்கள். ராஜபாளையம் அருகே உள்ள தாட்கோ காரனையைச் சார்ந்தவர் தீபா இவர் அந்த பகுதியில் இருக்கின்ற ஒரு செங்கல் சூலையில் வேலை பார்த்து வருகின்றார்.

இந்த நிலையில், அதே செங்கல் சூலையில் பணியாற்றி வந்த சேர்த்துரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் காதலாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 19ஆம் தேதி இருவரும் அவரவர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு சேத்தூர் மற்றும் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

காவல்துறையினரின் தீவிர விசாரணையில் காணாமல் போன இருவரும் கன்னியாகுமரியில் இருப்பது தெரிய வந்தது. ஆகவே அங்கு சென்று இருவரையும் அழைத்து வந்த சேத்தூர் காவல்துறையினர், தீபாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தமிழக அரசு இதுபோன்று மாணவ, மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக உண்டாகும் பாலியல் விவகாரங்களை தடுப்பதற்கு உதவி மையங்கள் மற்றும் புகார் எண்களை அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமாக அவர்கள் எந்த வித பயமும் இல்லாமல் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் தொடர்பான புகார்களை வழங்கலாம்.அந்த விதத்தில் 14417 என்ற உதவி எண்ணுக்கு அழைத்து தங்களுடைய புகார்களை வழங்கலாம் என்று காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

கொலை செய்வதற்கு இன்ஸ்டாகிராமில் ஆள் தேடிய காதல் ஜோடி..!! முகத்தில் 50 முறை கத்திக்குத்து..!!

Thu Feb 2 , 2023
ஜெர்மனியின் முனிச் பகுதியில் வசித்து வந்தவர் 24 வயதான அழகுக்கலை நிபுணர் ஷஹ்ரபான். ஈராக் வம்சாவளியை சேர்ந்தவரான இவர், இன்ஸ்டாகிராமில் அழகு குறிப்புகளை வழங்கி சோஷியல் மீடியாவில் பிரபலமானார். திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், ஷேகிர் கே என்ற இளைஞரை காதலித்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு தனது முன்னாள் கணவரை சந்திக்கப்போவதாக கூறி விட்டு ஷஹ்ரபான் வீட்டில் இருந்து சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை, இதனால், பதறிப்போன […]
கொலை செய்வதற்கு இன்ஸ்டாகிராமில் ஆள் தேடிய காதல் ஜோடி..!! முகத்தில் 50 முறை கத்திக்குத்து..!!

You May Like