சென்னை மெரினா பீச்சில் தினமும் லட்சக்கணக்கான வந்து போகின்றனர்,இதில் பகல, இரவு எந்த நேரத்திலும், எந்த பயமும் இல்லாமல் வந்து போகலாம், அந்த அளவுக்கு அங்கு போலீஸ் ரோந்து பணியில் இருக்கின்றனர்,இந்த நிலையில், நடு இரவு சுமார் 2 மணியளவில் ஒரு பெண் ஆட்டோவில் வந்துள்ளார், அப்பொழுது மழை காரணமாக, 4 பேர் கொண்ட கும்பல் அங்கு மழைக்காக நின்றுள்ளனர்,
அவர்கள் ஆட்டோவில் ஒரு பெண் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு, திடீரென்று அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்து அவர் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர், இதை எதிர்பாராத அந்த பெண், சத்தம் போட்டுள்ளார், அப்பொழுது அங்கு வந்த காவலர்கள் அந்தப் பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு வந்து விசாரித்தனர் பின்பு அவர்கள் சென்ற திசையை நோக்கி விரட்டிச் சென்றுள்ளனர்,
அந்த 4 பேரில் 3 பேர் தப்பிசென்ற நிலையில், ஒருவர் மட்டும் கடலுக்குள் குதித்து தப்பி விடலாம் என்று நினைத்து கடலில் குதித்துள்ளார்,ஆனாலும் போலீஸிடம் மாட்டிக் கொண்டார். உடனே தண்ணீரில் குதித்த காவலர்கள் அவனை தண்ணீரிலிருந்து இழுத்து வந்துள்ளனர். அதனடிப்படையில் அவன் அயனாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், அவருடைய பெயர் என்று, தெரியவந்துள்ளது,மேலும் அவனிடம்விசாரணை நடத்தி மற்ற மூன்று திருடன்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்