fbpx

சோறு போடாததால் தாயை தீவைத்து எரித்து கொலை செய்த இளைஞர் கைது……! புதுவையில் பயங்கரம்…..!

ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி அவனுடைய கோபம் தான். யார் ஒருவருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோபம் வருகிறதோ, அந்த மனிதனால் யோசிக்கவே முடியாது ஒருவர் யோசிக்காமல் செய்யும் காரியம் எதுவாயினும் அதில் அவர் வெற்றியடைவது சாத்தியம் இல்லை.

புதுச்சேரி வில்லியனூர் ஆண்டியார் பாளையத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(60) இவர் ஒரு கூலித் தொழிலாளி இவருடைய மனைவி லதா(55) இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள் இவர்களுடைய 2வது மகன் புகழ்மணி (24) இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பாடு கேட்டு தன்னுடைய தாயிடம் தகராறில் ஈடுபட்டிருக்கிறார்.

இதன் காரணமாக, இருவருக்கும் வாக்குவாதம் மூண்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் கொண்ட புகழ் மணி திடீரென்று தன்னுடைய தாய் லதா மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதனை கண்ட தட்சிணாமூர்த்தி மனைவி தீயில் எரிவதை கண்டு தீயை அணைக்க முயற்சித்து இருக்கிறார்.

இதன் காரணமாக, தட்சிணாமூர்த்தி காயம் அடைந்தார் லதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீக்காயம் அடைந்த தட்சிணாமூர்த்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக மங்கலம் காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்து புகழ்மணியை கைது செய்தனர்.

Next Post

கோவையில் ஆயுதங்களுடன் மிரட்டல் வீடியோ வெளியிட்ட இளம் பெண்…..! சங்ககிரியில் கைது காவல்துறையினர் நடவடிக்கை…..!

Thu Mar 16 , 2023
கோவை பாப்பநாயக்கன்பாளைத்தில் சத்தியபாண்டி என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சூட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது. இதனை அடுத்து கடந்த 13ஆம் தேதி கோவை நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்ற நபர் பட்ட பகுதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இத்தகைய நிலையில் ஒரு இளம் பெண் ஃபேன்ஸ் கால் மீ தமன்னா என்ற பெயரில் instagram பக்கத்தில் புகைபிடித்தவாறும் கையில் பட்டாகத்தி அறிவால் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நின்றபடியும் […]

You May Like