தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் பல காலமாக போராடி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி இந்த டாஸ்மாக் கடையினால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளனர்.பல குடும்பங்கள் என்ன ஆனது என்ற விவரமே தெரியாமல் போய்விட்டது.
தற்போது மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.ஆனால் அந்த உரிமை தொகை எத்தனை பெண்களின் கையில் இருக்கும்? எத்தனை பெண்களின் கையில் இருக்கும் அந்த 1000 ரூபாய் உரிமை தொகை அப்படியே டாஸ்மாக் கடைக்கு செல்லும்? என்பதை தமிழக அரசால் கூட அறிய முடியாது.
இன்று தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு தவறுகளுக்கு இந்த மது தான் முக்கிய காரணமாக இருக்கிறது.ஆகவே கூடிய விரைவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முற்றிலுமாக மூட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ், மாரியம்மாள் தம்பதியினருக்கு சேது ராஜா (18) என்ற மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர் சேது ராஜா கூலி வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் தான் சேது ராஜா பொங்கல் தினத்தன்று இரவு நண்பர்களுடன் வெளியே சென்று இருக்கிறார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை இந்த நிலையில், மறுநாள் காலை வாலாங்குளம் கண்மாயில் அவர் உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார் தீயணைப்புத் துறையினர் அவருடைய உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மம்சாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் காவல்துறையினரின் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகினர்.
அதாவது, சேதுராஜாவும், அவருடைய உறவினர் கார்த்திக் என்ற நபரும் ஆலங்குளம் கண்மாய் பகுதியில் மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது கார்த்திக்கின் சகோதரர்களான கருப்புசாமி (23) வீரமணி (27) உள்ளிட்ட இரண்டு நபர்களும் அந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் சேதுராஜாவிடம் கார்த்திக்கை கெடுப்பதாக தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த வாக்குவாதம் அதன் பிறகு கைகலப்பாக மாறி இருக்கிறது. இதில் கருப்புசாமி, வீரமணி உள்ளிட்ட இருவரும் சேது ராஜாவை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் பயந்து போன அவர்கள் சேது ராஜாவின் உடலை கண்மாயில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்து விட்டனர். இதனை தொடர்ந்து, சேதுராஜா உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி கருப்புசாமி, வீரமணி உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.