fbpx

இன்று தூத்துக்குடி ஆய்வு…! டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிர்மலா சீத்தாராமன்…!

டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிர்மலா சீத்தாராமன், இன்று தூத்துக்குடி செல்ல உள்ளார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் ஒரு பகுதியாக திருச்செந்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழை வெள்ளத்தால் ஆறுகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன.

இந்நிலையில் தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மதியம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளார். முன்னதாகவே மதியம் 12:30 மணியளவில் வெள்ள பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

டெல்லியில் இருந்து விமானம் சென்னை வந்தடைந்த நிர்மலா சீத்தாராமன், இன்று தூத்துக்குடி செல்ல உள்ளார். தூத்துக்குடி டவுன், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் மற்றும் முத்தையாபுரம் போன்ற பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் மற்றும் வீடுகள் விளைநிலங்கள் என அனைத்தையும் நேரில் பார்வையிட உள்ளார்.

Vignesh

Next Post

அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள்.! ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்.! பரபரப்பு தகவல்கள்.!

Tue Dec 26 , 2023
இந்தியாவில் நடைமுறையில் இருந்து வந்த ஐபிசி சிஆர்பிசி மற்றும் எவிடன்ஸ் ஆக்ட் ஆகிய சட்டங்கள் இன்றிலிருந்து மாற்றப்பட்டு இருக்கிறது. இவற்றிற்கான ஒப்புதலும் குடியரசு தலைவரிடம் பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உள்ள சட்டங்களை சில திருத்தங்கள் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புதிய […]

You May Like