fbpx

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு…! வரும் 31-ம் தேதி வரை கால அவகாசம்…! உடனே இதை செய்து முடிச்சுடுங்க…

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை 31.01.2024-க்குள் பதிவேற்றம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு NMMS தகுதித் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

இத்தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தகுதியானவர்கள். மேலும் இந்தத் தேர்வில் பங்கேற்க, மாணவரின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.1.5 லட்சம் இருப்பதுடன், 7-ம் வகுப்பின் முழு ஆண்டு தேர்வில், 55 சதவீத மதிப்பெண்களுக்கு மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31-ம் தேதி வரை கல்வித்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

Vignesh

Next Post

கும்பாபிஷேக விழாவுக்கு போகாத தோனி!… காரணம் வெளியானது!

Tue Jan 23 , 2024
சாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் விருப்பம் காட்டுவது இல்லை என்பதால், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளன. ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்பதற்காக ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள […]

You May Like