வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.. அங்கு சிறிய தவறுகளுக்கு கூட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.. மேலும் அங்கு பல விசித்திரமான சட்டங்களும், விதிகளும் நடைமுறை உள்ளன.. இந்நிலையில் வடகொரியாவில் வழங்கப்படும் கொடூர தண்டனைகள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மரணதண்டனை, ஆபத்தான மனித பரிசோதனைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்தல் உள்ளிட்ட கொடூரமான மனித உரிமை மீறல்களை வட கொரியா செய்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது..

தென் கொரியவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் 6 மாத கர்ப்பிணி பெண்ணை வட கொரிய அரசு பகிரங்கமாக தூக்கிலிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், அதிகாரிகள் மனித பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும், ஒரு சில பெண்களை கருப்பை நீக்கம் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
6 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர், தனது வீட்டில் நடனமாடும் போது வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் இல்-சுங்கின் உருவப்படத்தை சுட்டிக்காட்டியதால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது, மதமாற்றம் நாட்டை விட்டு வெளியே முயற்சித்தல் போன்ற காரணங்களுக்காக பலருக்கு வடகொரிய அரசு மரண தண்டனை விதித்தது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 முதல் 2022 வரை, வட கொரியாவில் நடந்த கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து, தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது.. மேலும் வடகொரியாவில் இருந்து இருந்து தப்பி ஓடிய 500க்கும் மேற்பட்ட வட கொரியர்களிடம் இருந்து சாட்சியம் சேகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வட கொரிய குடிமக்களின் வாழ்வுரிமை பெரிதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தோன்றுகிறது. போதைப்பொருள் குற்றங்கள், தென் கொரிய வீடியோக்கள் விநியோகம் மற்றும் மத மற்றும் மூடநம்பிக்கை உள்ளிட்ட மரண தண்டனையை நியாயப்படுத்தாத செயல்களுக்கு மரணதண்டனை பரவலாக நிறைவேற்றப்படுகிறது.
மக்களுக்கு ரகசியமாக தூக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு, பலவந்தமாக மருத்துவமனை 83 என்ற வசதிக்குக் கொண்டு செல்லப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.. மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக குள்ளத்தன்மை கொண்டவர்கள், அவர்களின் மனித உரிமைகள் பறிக்கப்பட்டு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மருத்துவ நடைமுறைகள் நடத்தப்பட்டன..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..