fbpx

பா.ஜ.க-வோடு கள்ள உறவில் கைகோத்து இருக்கும் எடப்பாடி பழனிசாமி..! ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

”திமுக மீது புகார் தெரிவிப்பவர்கள், முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்”..! ஆர்.எஸ்.பாரதி சவால்

மறைமுகமாக மதவாத பாஜகவோடு கள்ள உறவில் கைகோத்து இருக்கும் பழனிசாமி, மத்திய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து செயற்குழு கூட்டத்தில் ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில்; இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலே நல்லாட்சி வழங்கிவரும் திராவிட மாடல் ஆட்சியின் மீது சில கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றி அதன்மூலம் களங்கம் சுமத்திடலாம் எனக் கற்பனைக் கோட்டை கட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பொதுக்குழுவைக் கூட்டி விட்டோமே தீர்மானத்திற்கு என்ன செய்வது, எங்கே போவது, குறையின்றி நடந்துவரும் திமுக அரசு மீது எதைச் சொல்லி பழி போடுவது எனத் தெரியாமல் இட்டுக்கட்டிய பொய்களை எழுதி நிரப்பி கண்டனத் தீர்மானம் எனக் கதை கட்டியிருக்கிறார் ‘கட்டுக்கதை’ பழனிசாமி.

இந்திய வானிலை ஆய்வுமையத்தாலேயே கூட சரிவர கணிக்கமுடியாத ஃபெஞ்சல் புயலால் எதிர்பார்க்காத அளவு, எதிர்பார்க்காத இடங்களில் அதி கன மழை பெய்த போதும் முதல்வரின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. கடந்தகால நிர்வாகத்திறனற்ற அதிமுக ஆட்சியில் புயலின் போது பெருத்த உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டதை போல தற்போதைய திராவிட மாடல் ஆட்சியிலும் நடக்கும் என எண்ணி ஏமாந்து போன பழனிசாமி தற்போது கண்டன தீர்மானமாவது நிறைவேற்றுவோம் என நிறைவேற்றி இருக்கிறார்.

மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றிய, மத்திய அரசு தனித்து ஏலம் விடும் அதிகார சட்டத்திருத்தத்தை வாயாரப் புகழ்ந்து, வானளவு வாழ்த்தி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஆதரித்து, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை அடமானம் வைத்துவிட்டு தற்போது அது வெளிப்பட்ட உடன், என்ன செய்வதென்று தெரியாமல் திமுக மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றும் நாடகத்தை நடத்தி உள்ளார்.

டங்ஸ்டன் சுரங்கத்துக்கான அனுமதியைக் கொடுக்க காரணமே அதிமுக ஆட்சிதான். 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மதுரை மேலூர் பகுதியில் இரவோடு இரவாக நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்தான் அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து ஏலம் விட்டுள்ளது.இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்க முயற்சிக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) நிறைவேறக் காரணமாக இருந்த அதிமுக, தற்போதும் கூட இஸ்லாமிய சமூக மக்களை அவதூறாக பேசிய நீதிபதிக்கு ஆதரவாக செயல்பட்டு சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துவரும் அதிமுக, இன்று இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுவிப்பு பற்றி பேசுவது வேடிக்கை.

அதிர்ஷடத்தின் வழியில் ஆட்சியில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமி மதவாத சக்திகளோடு கைர்கோத்து சிறுபான்மை மக்களின் உரிமையை அடமானம் வைத்துவிட்டு, தனது ஆட்சிக்காலத்தில் சிறையில் வாடும் இஸ்லாமிய மக்களை விடுவிக்க சிறு துரும்பை கூட கிள்ளிபோடாத பழனிசாமி தற்போது யோக்கியன் நாடகம் போட்டால் மக்கள் ஏமார்ந்து விடுவார்களா என்ன?தற்போதும் கூட மறைமுகமாக மதவாத பாஜகவோடு கள்ள உறவில் கைகோத்து இருக்கும் பழனிசாமி, மத்திய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை; தீர்மானங்களில் கூட பாஜகவுக்கு வலிக்காத வகையில் வலியுறுத்தல் தான். ஆனால் சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசுக்குக் கண்டனமாம்.

இப்படி கபட வேடம் பூண்டிருக்கும் பழனிசாமி என்றுமே சிறுபான்மை மக்களின் அரணாக நிற்கும் திராவிட மாடல் ஆட்சியை குறை கூறினால் மக்கள் நம்பிவிடுவார்களா என்ன? நிர்வாகத்திறனற்ற பத்தாண்டுகால அதிமுக ஆட்சியில் நசிவுற்ற அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் திராவிட மாடல் விடியல் ஆட்சியில் மேம்பட்டிருக்கின்றன. உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலமும், முதல்வரே துபாய், சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நேரடியாகச் சென்று முதலீடுகளைத் திரட்டியதன் விளைவாகவும் தமிழ்நாட்டில் பெரும் நிறுவனங்கள் தொழில் தொடங்கி அதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அதன் காரணமாக இந்தியாவிலேயே அதிக வேலையாப்பினை உருவாக்கி வளர்ச்சிப்பாதையில் முன்னணியில் இருக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது.

அதோடு தமிழக முதலவர் பெண்கள் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளால் இன்று பெண்கள் வேலைக்கு செல்லும் விகிதத்திலும், சுயசார்பு நிலையிலும் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே முதலாவதாக உள்ளது. அதிமுக ஆட்சியில் இருள் சூழ்ந்து கிடந்த தமிழ்நாடு திராவிட மாடல் நல்லாட்சியில் ஒளி வீசுயபடி வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனே முக்கியம் என முதல்வர் தலைமையிலே சிறப்பாக நடந்துவரும் திராவிட மாடல் ஆட்சி மீது அள்ளிவிடும் அதிமுகவின் கண்துடைப்பு கண்டனக்கதைகளைத் தமிழ்நாட்டு மக்கள் துளியும் நம்ப போவதல்லை; கட்டுக்கதை பழனிசாமியின் துரோகத்தையும் மறக்கப்போவது இல்லை” என தெரிவித்துள்ளார்.

English Summary

Not a single word was uttered in the executive committee meeting condemning the anti-people actions of the central government.

Vignesh

Next Post

சற்றுமுன்.. விசிக-வில் இருந்து ஆதவ் அர்ஜூனா திடீர் விலகல்.. தவெக-வில் இணைகிறாரா?

Sun Dec 15 , 2024
Aadhav Arjuna Sudden Quit From VCK

You May Like