நர்சிங் கல்லூரி மாணவி விடுதி அறையில் மர்மமாக கிடந்துள்ள சம்பவம் புழல் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ வயது 20. இவர் சென்னை புழலில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை எல்லா மாணவிகளும் கல்லூரிக்கு சென்ற போது சுபஸ்ரீ கல்லூரிக்கு வரவில்லை. இதனால் விடுதிக்கு வந்த மாணவிகள் அவரது அறையை தட்டி இருக்கின்றனர். நீண்ட நேரமாகியும் அரை கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர்.
அப்போது கட்டிலில் படுத்திருந்திருக்கிறார் சுபஸ்ரீ. அவரது பெயரை கூறி அழைத்தும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாததால் கதவை உடைத்து மாணவிகள் உள்ளே சென்று பார்த்தபோது சுபஸ்ரீ இறந்த நிலையில் படுத்திருந்தது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து விடுதி நிர்வாகிகளை தொடர்பு கொண்ட மாணவிகள் இது தொடர்பாக காவல்துறையினரிடமும் புகார் அளித்துள்ளனர்.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் அவரது அறையை சோதனை செய்த காவல்துறையினர் இது தொடர்பாக மற்ற மாணவிகளுடனும் விசாரணை செய்து வருகின்றனர். நர்சிங் மாணவி மர்மமான முறையில் விடுதியில் இருந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.