தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி வேலை நாட்கள், விடுமுறை அடங்கிய அட்டவணையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என்றும், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை அளிக்கப்பட்டு, பின்னர் அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அட்டவணைப்படி அக்டோபர் 6-ம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெறும் என்று செய்தி வெளியாகியது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது; தற்போது வரை வாய்வழி அறிவுறுத்தலாகத்தான் இருக்கிறது. அதிகாரபூர்வமாக பள்ளிக்கல்வித்துறை வெளியிடும். அப்படி வெளியிட்டால் தான் இது உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.