fbpx

நோட்…! ஜனவரி 23, 24 தேதிகளில் முக்கிய நிகழ்ச்சி நடைபெறும்…! மத்திய அரசு தகவல்…!

குடியரசு தின கொண்டாட்டங்கள் 2023-ன் ஒரு பகுதியாகயாவும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையிலும், பராக்ரம் திவாஸ்-‘பராக்கிரம தினம்’ கொண்டாடப்படுகிறது.

டெல்லியில் 2023, ஜனவரி 23, 24 தேதிகளில் இந்திய ராணுவத்தினரின் வீர, தீர சாகச நிகழ்ச்சிகள் மற்றும் பழங்குடியின கலாச்சாரத்தின் அழகை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக அங்குள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் பழங்குடியினர் நடன விழாவான ‘ஆதி ஷௌர்யா – பர்வ் பராக்ரம் கா’ நடைபெறும். இந்த 2-நாள் நிகழ்வின் நிறைவு விழாவில், பிரபல பாடகர் திரு கைலாஷ் கேரின் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த விழாவின் நோக்கம், நம் நாட்டில் வாழ்ந்த நெஞ்சுரமிக்கவர்களின் தியாகங்களை நினைவுகூருவதும், இந்தியாவை மிகவும் தனித்துவமாகவும், பன்முகத்தன்மையுடனும் இருப்பதற்கு காரணமான அதன் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடுவதாகும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வீரத்தை கொண்டாடுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Vignesh

Next Post

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்..!! சூப்பரான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Jan 9 , 2023
TCS (Tata Consultancy Services) நிறுவனத்தில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. TCS காலியிடங்கள்: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Software Engineer – Backend Technologies பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனுபவம்: இப்பணிக்கு […]
இளைஞர்களே செம குட் நியூஸ்..!! லட்சக்கணக்கானோருக்கு வேலை வழங்கும் டிசிஎஸ் நிறுவனம்..!!

You May Like