fbpx

எல்லாம் ஜாலி தான்… அனைத்து அரசு மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு வரும் 10-ம் தேதி விடுமுறை…! ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…!

கோட்டை மாரியம்மன்‌ திருக்கோவில்‌ ஆடித்திருவிழா தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 10-ம் தேதி சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ளூர்‌ விடுமுறை என மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ கார்மேகம்‌ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சேலம்‌ அருள்மிகு கோட்டை மாரியம்மன்‌ திருக்கோவில்‌ ஆடித்திருவிழா தினத்தை முன்னிட்டு, சேலம்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு 10.08.2022, புதன்கிழமை அன்று உள்ளூர்‌ விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர்‌ விடுமுறை செலாவணி முறிச்சட்டம்‌ 1881 (negotiable instrument act 1881-ன்‌ கீழ்‌ வராது என்பதால்‌ அரசுப்‌ பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள்‌ கவனிக்கும்‌ பொருட்டு அன்றைய தினம்‌ மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம்‌ மற்றும்‌ சார்நிலை கருவூலங்கள்‌ குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்‌. இந்த உள்ளூர்‌ விடுமுறைக்கு ஈடாக சேலம்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்கள்‌ வருகின்ற 03.09.2022, சனிக்கிழமை அன்று பணி நாளாக செயல்படும்‌. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம் அவர்கள்‌ தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்‌.

Also Read: தமிழக அரசு சார்பில் 9 முதல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் உதவித்தொகை…! எப்படி அப்பளை செய்வது…? முழு விவரம் இதோ…

Vignesh

Next Post

Monkey Pox: பயங்கர அலர்ட்... உங்க ஆண்குறி வீக்கமாக இருந்தால் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி...! மருத்துவ நிபுணர்கள் தகவல்...!

Sat Jul 30 , 2022
உலகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நோய்க்கான புதிய அறிகுறிகளை நிபுணர்கள் அறிவித்துள்ளனர். உலகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் இந்த நோயை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது உலகளாவிய அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் முக்கியமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள்,  ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண் மூலம் பரவுகிறது என்பதை அனைத்து ஆதாரங்களும் சுட்டிக்காட்டுகின்றன. தற்பொழுது குரங்கு […]
தீவிரமாக பரவும் குரங்கு காய்ச்சல்..! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..!

You May Like