கர்நாடக மாநில பகுதியில் உள்ள கொப்பல் மாவட்டம் குகனூர் பகுதியில் சேர்ந்தவர் பிரகாஷ் பஜந்திரி(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் பலகேரி பகுதியில் வசித்து வரும் சுமா என்ற 18 வயதுடைய பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இருவருமே கல்லூரியில் ஒன்றாக படித்து வருகின்ற நிலையில், பிரகாஷ் பஜந்திரி, சுமாவிடன் தனது காதலை கூறியுள்ளார். ஆனால் பிரகாஷ் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அவரை காதலித்தால் பிரச்சனை வரும் என்று, காதலை மறுத்துள்ளார்.
அதனால் தன்னை காதலிக்குமாறு சுமாவை, பிரகாஷ் வற்புறுத்தி பலமுறை வந்நததாக தெரியப்படுகிறது. இந்நிலையில், நேற்றைய தினத்தின் காலையில் சுமாவின் வீட்டில் அவரது பெற்றோர்கள் திருவிழாவுக்கு ஊருக்கு சென்றிருந்தனர்.
அப்போது சுமா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட பிரகாஷ் அவரது வீட்டிற்கு வந்துள்ளளார். பின்னர், சுமாவின் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்த பிரகாஷ், மீண்டும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனிடையே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், காதலை ஏற்க மறுத்த சுமா, மீண்டும் தன்னை தொல்லை செய்ய வேண்டாம் என்றுக் கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுமாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்த செயலால் சம்பவ இடத்திலேயே சுமா உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து, பிரகாஷ் தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டார். அலரல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.