fbpx

தாயிடம் பொய் சொல்லிவிட்டு காதலனுடன் அவுட்டிங்..!! கதவை திறந்து உள்ளே வந்த 2 கேடி பாய்ஸ்..!! இவர்களும் விட்டு வைக்கல..!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பல்லாவரத்தை சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காரணமாக ஹரிஷ் வெளியில் அழைத்துள்ளார். அவரை பார்க்கும் ஆசையில் இளம்பெண் கடந்த 26ஆம் தேதி வெளியில் செல்ல முடிவு செய்தார். தனது தாயிடம், தோழியின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு செங்கல்பட்டு சென்றுள்ளார்.

அங்கு ஹரிஷ் இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு, பல்லாவரத்தில் உள்ள தனது அறைக்கு வந்துள்ளார். இருவரும் இரண்டு நாட்கள் தனிமையில் தங்கியுள்ளனர். அப்போது, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் ஹரிஷ், தனது நண்பர்கள் இருவரை வரவைத்து 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

வலி தாங்க முடியாமல் தவித்த அப்பெண், நேற்று முன்தினம் இரவு, சிட்லப்பாக்கம், சங்கர் நகர் ஆகிய இடங்களில் இருந்து தனது சகோதரருக்கு மாறி மாறி செல்போனில் குறுஞ்செய்தி மற்றும் லொக்கேஷனை அனுப்பியிருக்கிறார். அதை வைத்து, அவரது சகோதரர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, பல்லாவரம் மகளிர் போலீசார், சங்கர் நகர் அருகே அப்பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

அப்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அப்பெண்ணை அழைத்து வந்த ஹரிஷ் எந்த பகுதியை சேர்ந்தவர், எந்த இடத்தில் தங்கினர், ஹரிஷின் நண்பர்கள் யார் யார் என்பது உள்ளிட்ட விவரங்கள் போலீசுக்கு தெரியவில்லை. இது தொடர்பாக இளம்பெண்ணின் குடும்பத்தினர் புகார் கொடுத்தால் மட்டுமே நடந்த சம்பவத்தின் முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், திருக்கழுக்குன்ற காவல் நிலையத்தில், இளம்பெண் மாயமானதாக புகார் பதிவாகியுள்ளது. அந்த வழக்கை பல்லாவரம் காவல் நிலையத்திற்கு மாற்றுவது குறித்தும் போலீசார் ஆலோசித்து வருகின்றனர். 3 பேரை கண்டுபிடித்து கைது செய்யவும் போலீசார் முடிவு செய்திருக்கின்றனர்.

Read More : “தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம்”..!! போராளிகளின் தியாகங்களை நினைவுக் கூர்ந்த விஜய்..!!

English Summary

Harish brought two of his friends and together they raped the girl.

Chella

Next Post

சோடியம் வழிகாட்டுதல்களை வெளியிட்ட WHO.. இந்தியாவில் 3 லட்சம் இறப்புகளை தடுக்கலாம்..!! - ஆய்வில் தகவல்

Fri Nov 1 , 2024
Reducing sodium in packaged foods could save 3 lakh lives in India: Lancet study

You May Like