fbpx

#கிருஷ்ணகிரி:5 குழந்தைகளை பரிதவிக்க விட்டு பெற்றோர்கள் செய்த செயல்..!

கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் உள்ள வேப்பனஹள்ளியில் ஹைதர் அலி தன்னுடைய மனைவி ஷானுமா, 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். தம்பதிகள் இருவரும் பை செய்யும் தொழிலை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று காலையில் தம்பதிகள் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து குழந்தைகள் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ஹைதர் அலி மற்றும் ஷானுமா பிணமாக தூக்கில் தொங்கியுள்ளனர். இதனை பார்த்த குழந்தைகள் அதிர்ச்சியில் கத்தி அலரியுள்ளனர்.

குழந்தைகளின் அலரல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வேப்பனஹள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அத்துடன், இது பற்றி வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தம்பதிகள் கடன் நெருக்கடியால் தற்கொலை செய்தனரா? இல்லை குடும்ப சண்டையால் தற்கொலை செய்தனரா? என்ற விபரம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

ரூ.4,000 To ரூ.14,000..!! பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்..!! பயணிகள் கடும் அதிருப்தி..!!

Sat Dec 3 , 2022
பன்னாட்டு விமானக் கட்டணம் மட்டுமின்றி உள்நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியிடங்களுக்கு அதிகளவு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 23 ஆம் தேதி வரை அரையாண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் […]

You May Like