திருவள்ளூர் மாவட்ட பகுதியில் , ராமாபுரம் பகுதியில் தனசேகர் (50) தனது மனைவி பூங்கொடி (44) மற்றும் மகன் ஹரிஷ்(17), வசித்து வந்துள்ளனர். மகன் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் இருந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார். மகனின் முதலாண்டு நினைவு நாள் அடுத்த மாதம் வர உள்ளது.
இதனிடையே மகன் உயிரிழந்த நிலையில், மிகுந்த மன உளைச்சலில் தம்பதிகள் இருந்துள்ளனர். இந்த நிலையில், தனசேகரின் தாயார் நேற்று காலை தனசேகரை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். அங்கே தனசேகர், பூங்கொடி இருவரும் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்து கிடந்துள்ளனர். மேலும், அருகில் பூச்சி கொல்லி மருந்தும் அத்துடன் குளிர்பான பாட்டில் ஆகியவை இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இது பற்றி தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, இருவரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மகன் உயிரிழந்த சோகத்தில் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.