fbpx

ஜாதி ரீதியாக திட்டிய சீமான்… நெல்லையில் கூண்டோடு வெளியேறி த.வெ.க-வில் இணையும் நிர்வாகிகள்…!

ஜாதி ரீதியாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டியதால் நெல்லையில் கூண்டோடு வெளியேறிய கட்சி நிர்வாகிகள்.

திருநெல்வேலி -நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தங்களது குறைகளை கூறிய நிர்வாகிகளை, சீமான் ஜாதியை குறிப்பிட்டு திட்டியதால், வாக்குவாதம் செய்து அவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில், பர்வீன் – மாவட்ட இளைஞரணி தலைவர், அந்தோணி – நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி செயலாளர், அரசகுமார் – ராதாபுரம் ஒன்றிய தலைவர், சார்லஸ் – அம்பை சட்டமன்ற தொகுதி செயலாளர், சந்திரமோகன் – ராதாபுரம் தொகுதி துணைத் தலைவர் ஆகியோர் தங்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சாட்டை துரைமுருகன் தனது மேடை பேச்சில் ஜாதி ரீதியாக பேசி வருவதாக குற்றச்சாட்டை வைத்ததற்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்படிதாண்டா, நீ, வா, போ எனவும், ஜாதியை குறிப்பிட்டு ஒருமையிலும் பேசி திட்டியதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இதனால் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சீமானுடன் வாக்குவாதம் செய்து, கலந்தாய்வுக் கூட்டத்திலிருந்துவெளியேறியுள்ளனர். மேலும் கட்சியில் இருந்து அவர்கள் விலகி நடிகர் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

English Summary

Party executives who left the ntk with a cage after being scolded by Seeman, the coordinator of the naam tamilar party, on a caste basis.

Vignesh

Next Post

22 தீர்த்தங்கள் நிறைந்த ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்.. மெய் சிலிர்க்க வைக்கும் சுவாரஸ்ய வரலாறு இதோ..

Fri Nov 15 , 2024
Some interesting information about Rameswaram Ramanathaswamy Temple can be seen in this post.

You May Like