fbpx

ஜாமினில் வெளியே வந்துட்டா உன்ன விட்ருவோமா….? ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட நபர், திருநெல்வேலி அருகே பரபரப்பு சம்பவம்….!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, சிறைக்கு சென்று, சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த ஒருவரை, ஒரு கூலிப்படை கும்பல் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் சேரன்மகாதேவியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேரன்மகாதேவி பகுதியில் வசித்து வரும் கணேசனுக்கு, மனைவி மற்றும் இரு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும், அவர் சென்னையில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் தான், ஒரு வழக்கு குறித்து, திருநெல்வேலிக்கு சென்ற இவர், நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, சேரன்மகாதேவியில் இருக்கின்ற தன்னுடைய வீட்டிற்கு வந்துள்ளார்.

அதன் பிறகு, அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தருவையில் இருக்கின்ற தன்னுடைய மாமனார் வீட்டிற்கு போய் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், கணேசனை வழிமறித்து, கொலை செய்ய முயற்சி செய்தது. இதன் காரணமாக, பயந்து போன கணேசன், வயல்வெளிக்குள் குதித்து ஓட தொடங்கினார்.

ஆனாலும், அவரை விடாமல், விரட்டிச் சென்ற அந்த கும்பல், சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றது. இதனால், படுகாயம் அடைந்த கணேசன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன் காரணமாக, அந்த பகுதியில் பெரும் பதற்றம் உண்டானது. அக்கம் பக்கத்தில், இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, கொலை சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், சென்ற வருடம் நடந்த ஒரு கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, நான்கு மாதங்களுக்கு முன்னர் தான், கணேசன் வெளியே வந்துள்ளார். என்ற தகவல் கிடைத்தது. ஆகவே, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம். என்று சொல்லப்படுகிறது.

Next Post

ஹெராயின், ஏகே 47 துப்பாக்கிகள் கடத்தல்..!! நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்.ஐ.ஏ. சம்மன்..!! சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

Tue Aug 29 , 2023
போதை பொருள் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமிக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடல் பகுதியில் சிறிய மீன்பிடி படகு மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு 327 கிலோ ஹெராயின் 5 ஏகே 47 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவை கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் சோதனை […]

You May Like