தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் மீது அரிவாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
மாத்தளை பகுதியில் உள்ள ரணபிமகத்தில் நேற்று காலை நேரத்தில் அரிவாள் வெட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது .அந்த வீட்டிற்கு அருகே உள்ள நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதலில் 38 வயது தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது சிறுவன் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் மூன்றரை வயது சிறுவன் மாத்தளை பகுதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்த பின்னர் உயிரிழந்துள்ளான். அத்துடன் தாய் மற்றும் குழந்தைகள் இருவர் பலத்த காயமடைந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து அரிவாளால் வெட்டியவரை கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.