டெல்லியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் மூன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் உள்ள அரசு பள்ளியைச் சார்ந்த உடற் கல்வி ஆசிரியர் மூன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் அந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக 2016 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வழக்கம்போல் பள்ளியில் மாணவர்களுக்கு உடற் கல்வி பயிற்சி அளித்துக் கொண்டு இருந்திருக்கிறார் ஆசிரியர். அப்போது மூன்றாம் வகுப்பு மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் போது ஒரே ஒரு மாணவியை மட்டும் ஆளில்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வன்கொடுமை செய்துள்ளார்.
வீடு திரும்பிய மாணவி மிகவும் சோர்வுடன் காணப்படவே பெற்றோர் அந்த மாணவியிடம் விசாரித்து இருக்கின்றனர். அப்போது அந்த சிறுமியை ஆசிரியர் என்ன செய்தார் என்று தனது தாயாரிடம் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் டெல்லி காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். அந்த உடற்கல்வி ஆசிரியரின் மீது ஐ பி சி 376 மற்றும் ஐபிசி 506 ஆகிய பிரிவுகளில் மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் உனக்கு பதிவு செய்யப்பட்டது.
உடற்கல்வி ஆசிரியரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில நாட்களுக்கு முன்பும் அந்த சிறுமியை இதேபோன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிய வந்திருக்கிறது. இதனை அடுத்து ஆசிரியரை கோர்ட்டில் ஆஜர் படுத்தியது டெல்லி போலீஸ் அரசு பள்ளி நிர்வாகமும் விசாரணை முடியும் வரை ஆசிரியரை பணியிட நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. சமீபகாலமாக பள்ளி மாணவிகள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பெற்றோர்கள் மத்தியிலும் சமூகத்தின் மத்தியிலும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.