fbpx

கள்ளக்காதலனிடமிருந்து அம்மாவை புத்திமதி கூறி பிரித்து வந்த +1 மாணவன்! கத்தியால் குத்தி கொன்ற கள்ளக்காதலன்!

கள்ளக்காதலனிடமிருந்து தாயை மீட்ட +1 மாணவனை கள்ளக்காதலன் கத்தியால் குத்திக்கொண்டு சம்பவம் சென்னையில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை விருகம்பாக்கம் தாங்கள் ஏரிக்கரை பகுதியைச் சார்ந்தவர் இளஞ்செழியன் வயது 38. இவரது மனைவி தனலட்சுமி. பிளம்பிங் வேலை செய்து வரும் இளஞ்செழியனுக்கு மதன்குமார் மற்றும் ஜீவா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகனான மதன்குமார் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இளஞ்செழியன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் அவருக்கும் மனைவி தனலட்சுமியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தனலட்சுமி வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனத்தில் அவருடன் பணிபுரிந்த வேளச்சேரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர்ருடன் பழக்கம் ஏற்பட்டது. கார்த்திக் தனலட்சுமிக்கு அடிக்கடி ஆறுதல் வார்த்தைகள் கூறி வந்தார். மேலும் அவரது கணவர் இளஞ்செழியனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பதற்கும் உதவி புரிந்தார். இவர்களுக்கிடையேயான நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதனைத் தொடர்ந்து வேளச்சேரியில் தனலட்சுமி கார்த்திக்குடன் ஒன்றாக வசித்து வந்தார். சில நாட்களுக்கு பிறகு கார்த்திக்குடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் கார்த்திக்கை விட்டு பிரிந்து மீண்டும் விருகம்பாக்கம் வந்து இளஞ்சியுடன் வசிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி விருகம்பாக்கத்தில் இளஞ்செழியன் வீட்டிற்கு சென்ற கார்த்திக் தனலட்சுமி தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார் அப்போது தனலட்சுமியின் மகன் மதன்குமாருக்கும் கார்த்திக்குக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதன்குமாரை குத்தினார் கார்த்திக். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த கார்த்திகை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தப்பி ஓடிய கார்த்திக்கை காவல்துறை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் வேளச்சேரிக்கு வந்த மதன்குமார் தனது தந்தை இளஞ்செழியன் மனது மாறிவிட்டார் அவருடன் சேர்ந்து வாழுங்கள் எனக்கூறி தாயின் மனசை மாற்றிய அவருடன் அழைத்துச் சென்றதால் ஆத்திரத்தில் மதன்குமாரை குத்தியதாக தெரிவித்தார் கார்த்திக். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதன் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்திக்கின் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.

Baskar

Next Post

CSK கேப்டனாக 200வது போட்டியில் தல தோனி!... சாதனை பட்டியல் இதோ!

Thu Apr 13 , 2023
ராஜஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்றதையடுத்து சென்னை அணியின் கேப்டனாக தனது 200வது போட்டியில் தல தோனி விளையாடினார். கடந்த 2008ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் அறிமுகமானது. அன்றுமுதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்தி வருகிறார். இந்தியாவில் எந்த மைதானத்தில் சென்னை அணி விளையாடினாலும் அங்கு மஞ்சள் ஆர்மி படை குவிந்துவிடுவார்கள். சென்னை வீரர்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ஹோம் க்ரவுண்ட் ஃபீல் தான் இருக்கும். […]

You May Like