fbpx

படிக்கிற வயசுல தேவையா இதெல்லாம்.? போதை மாத்திரையால் மோதல்.! +2 மாணவன் கொடூர கொலை.!

சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்வது தொடர்பான தகராறில் 17 வயது பள்ளி மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த அஜய் என்ற சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்ற அஜய் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் அதே பகுதியில் உள்ள மறைவான இடத்தில் வெட்டு காயங்களுடன் அஜய் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் போதை மருந்து விற்பனை செய்வது தொடர்பான மோதலில் அஜய் கொலை செய்யப்பட்டது தெரிய வந்திருக்கிறது. எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணபிரான் மற்றும் சரவணன் இருவரும் இணைந்து போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்திருக்கிறது .

இந்நிலையில் கண்ணபிரான் தனது நண்பரான டேவிட் என்பவருடன் சேர்ந்து சரவணனை தேடி இருக்கிறார். அப்போது சரவணன் கிடைக்காததால் அவரது உறவினரான அஜயை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று போதை மருந்துகள் விற்பனை தொடர்பாக அவரிடம் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது அஜயை வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக டேவிட் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருக்கும் கண்ணபிரானை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Post

பெண் குழந்தைகளுக்கு புத்தாண்டு பரிசு!… சுகன்யா சம்ரிதி திட்டத்தின் வட்டி விகிதம் உயர்வு!… மத்திய அரசு அறிவிப்பு!

Sat Dec 30 , 2023
ஜனவரி-மார்ச் காலாண்டில் சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கான வட்டி விகிதத்தில் 20 அடிப்படை புள்ளிகளும், மூன்று ஆண்டு கால வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதங்களை 10 அடிப்படை புள்ளிகளும் மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. பெண் குழந்தைகளுக்கான சிறப்பு சேமிப்பு திட்டமான சுகன்யா சம்ரிதிக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அதாவது ஜனவரி-மார்ச் காலாண்டில் சுகன்யா சம்ரித்தி திட்டத்திற்கான வட்டி விகிதத்தில் 20 அடிப்படை புள்ளிகளும், மூன்று ஆண்டு […]

You May Like