அமெரிக்கா நாட்டில் மேரிலாந்து பகுதியில் உள்ள ஒரு பிரேத பரிசோதனை நிலையத்தில் ஜெசிகா லோகன் என்பவர் தொழில்நுட்ப வல்லுநராக பணிபுரிந்து வருகிறார்(31). இவர் தனது பணிகாலத்தில் சந்தித்த பல விபரீத அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார் அதில் இதுவும் ஒன்று.
பணிக்காலத்தில் ஒரு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுமதித்த நிலையில், அதனை சோதனை செய்துக் கொண்டிருந்தபோது அவர் உடலின் தொடை பகுதியில் ஏதோ ஒன்று ஊர்ந்து சென்றுள்ளதை கண்டுள்ளார்.
பிறகு என்ன என்று அதனை பார்த்தபோது உயிருள்ள கொடிய விஷம் கொண்ட பாம்பு என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே பயத்தில் உடனடியாக அறையில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்த பாம்பானது நபரின் உடலின் ஒரு ஓடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகவும், பிரேத பரிசோதனைக்கு கொண்டுவரும் பட்சத்தில் அது சிதைந்த நிலையில், இருந்தாகனும் என ஜெசிகா கூறியுள்ளார்.
சிதைந்த நிலையில் இருந்த உடல்பாகத்தில் இருந்த ஓட்டை வழியாக அந்த பாம்பானது சடலத்தின் உள்ளே சென்றிருக்கலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளார். பாம்பு குறித்து இவர் கூறியது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.