fbpx

வேலியே பயிரை மேயலாமா? பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்..

16 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான இளவரசன். இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருகிறார். இவர் 16 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, செய்வது அறியாமல் திகைத்துள்ளார். இதையடுத்து, சிறுமி சம்பவம் குறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், வெங்கமேடு காவல் நிலைய காவலர் இளவரசனை போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இளவரசன் ஏற்கனவே உதவி காவல் ஆய்வாளர் ஒருவரை தாக்கிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more: “ஒழுங்கா நான் சொன்னதை பண்ணு, இல்லேன்னா mark கம்மி பண்ணிடுவேன்” ஆசிரியருக்கு பயந்து மாணவி செய்த காரியம்..

English Summary

police sexually harassed a school student

Next Post

விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் அல்ல.. செயல்களால் பதில் சொல்லுங்க... தேசிய விருது பெற்ற நடிகை அட்வைஸ்..

Sat Jan 18 , 2025
விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் பதிலளிப்பதை விட, உங்கள் படைப்புகள் மூலம் பதிலளிக்க வேண்டியதே முக்கியம் என்று தேசிய விருது பெற்ற நடிகை சீமா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். 10வது அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் (AIFF) இன்று சிறப்பு அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வை பேராசிரியர் ஷிவ் கதம் நடத்தினார். இந்த அமர்வில் பேசிய சீமா பிஸ்வாஸ் தனது திரைத்துறை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தனது பயணத்தைப் பற்றி நினைவுகூர்ந்த சீமா பிஸ்வாஸ், […]

You May Like