fbpx

ஹோட்டல்களில் தரமற்ற உணவு… ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்க…! அமைச்சர் மா.சு அதிரடி உத்தரவு…!

தமிழக முழுவதும் ஆய்வு செய்து தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுபிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல்லைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் துறை ரீதியான விளக்கத்தை மாநில சுகாதாரத் துறை கோரியுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 16 ஆம் தேதி இரவு ஐவின்ஸ் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 42 பேருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்கள் உணவு தயாரிப்பதில் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறதா என்பதை கண்காணித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். அதே போல நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா..? ப்ரீசர் பெட்டிகள் உள்ளதா..? என கண்காணிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

மங்குஸ்தான் பழம் உடல் உஷ்ணத்தை குறைக்குமா....?

Wed Sep 20 , 2023
தற்போது இருக்கக்கூடிய விஞ்ஞான உலகத்தில் இயற்கையான உணவுகளையும், உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் பழங்களையும் நாம் முற்றிலுமாக மறந்தே போய் விட்டோம். அந்த வகையில், நாம் பெரிதாக அறிந்து கொள்ளாத பல்வேறு பழங்களில் ஒன்றுதான் மாங்குஸ்தான் பழம். இந்த பழம் தன்னுள் பல்வேறு ஊட்டச்சத்துக்களை வைத்திருக்கிறது. மங்குஸ்தான் பழத்தின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த மங்குஸ்தான் பழத்தில் இருக்கின்ற விட்டமின் சி, உடலுக்கு […]

You May Like