fbpx

BJP vs Congress | ‘தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு..!!’ மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார்?

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் :

18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் இன்று (ஜூன்.1) வரை 7 கட்டங்களாக நடைபெற்றன.கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதலாவது கட்ட தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்தமாக 66.14 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன் பிறகு, ஏப்ரல் 26ஆம் தேதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற 2ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 66.71 சதவீத வாக்குகள் பதிவாகின. மே 7ஆம் தேதி 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 3வது கட்ட தேர்தலில் 5.68 சதவீத வாக்குகள் பதிவாகின.

மே 13ஆம் தேதி 4வது கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக 69.16 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மே 20ஆம் தேதி 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 49 தொகுதிகளுக்கு நடைபெற்ற 5வது கட்ட மக்களவை தேர்தலில் 62.2 சதவீத வாக்குகள் பதிவாகின.

மே 25ஆம் தேதி 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 58 தொகுதிகளுக்கு நடைபெற்ற 6வது கட்ட மக்களவை தேர்தலில் 63.36 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில். பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு இன்று (ஜூன்.1) 7வது மற்றும் கடைசி கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. மக்களவை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளை மேற்கொண்ட பிரபல செய்தி நிறுவனங்கள் அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் :

நியுஸ் எக்ஸ் நிறுவனத்தின் கணிப்பு படி பாஜக தனியாக 315 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் 371 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சி 60 இடங்களிலும், இந்தியா கூட்டணி ஒட்டுமொத்தமாக 125 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்குமா பாஜக?

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 353 – 368 இடங்களை பெறும் என என்.டி.டி.வி வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிய வந்தது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இண்டியா கூட்டணி 118 – 133 இடங்களையும், மற்றவை 43 – 48 இடங்களையும், வெல்லலாம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றனர்.

Read more ; TN Exit Poll Result 2024: ‘தமிழ்நாட்டில் யாருக்கு எவ்வளவு இடம்..!’ அதிமுக, பாஜக எவ்வளவு வாக்குகள் பெறும்? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

Next Post

ஆந்திராவில் வெல்வாரா சந்திரபாபு நாயுடு ? - கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன!!

Sat Jun 1 , 2024
english summary

You May Like