fbpx

போஸ்ட் மெட்ரிக் & ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை…! குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சம்..! முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் மற்றும் ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான வருமான உச்சவரம்பை மத்திய அரசு ரூ. 8 லட்சமாக மாற்றியமைத்துள்ளது. தேசிய, வெளிநாட்டு கல்வி உதவித்தொகை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர்தரக் கல்வித் திட்டம் போன்றவற்றில் வருமான உச்சவரம்பு ரூ. 8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பின்தங்கிய நிலையில் வாழும் பல மாணவர்கள் மிகுந்த பயனை அடைந்துள்ளனர்.

அகில இந்திய உயர்கல்வி ஆய்வு தரவுகளின்படி ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் மற்ற மாணவர்களைக் காட்டிலும் கணிசமாகக் குறைந்துள்ளது. மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிடுகையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் சேர்வதற்குத் தேவையான வசதிகளை செய்து தருவது மிகவும் அவசியமானதாகும்.

மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகையானது ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க கணிசமாக பங்களிக்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்புக்கு ஏற்ப, இப்பிரிவினருக்கான உதவித்தொகைக்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ. 2.50 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கினால் இச்சமூகங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும்.

இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவித்தொகைக்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை ரூ. 2.50 லட்சத்தில் இருந்து, ரூ. 8 லட்சமாக உடனே உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

English Summary

Post Matric & Pre Matric Scholarship…! Family annual income ceiling of Rs. 8 lakhs

Vignesh

Next Post

தினமும் காபி குடிப்பதால் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் அதிகரிக்குமாம்!. ஆய்வில் தகவல்!.

Wed Dec 11 , 2024
Coffee: காபியுடன் உங்கள் நாளைத் தொடங்கினால், புத்துணர்ச்சியுடன் உங்கள் ஆயுளும் அதிகரிக்கும் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் காபியுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள். காலையில் ஒரு கப் ஸ்ட்ராங் காபி குடித்தால், உடல் புத்துணர்ச்சி பெறும். உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்க காபி சிறந்த பானம். ஒரு கப் காபி உங்களை உற்சாகமாக உணர வைக்கிறது. சிலர் ஒரு நாளைக்கு பல முறை காபி குடிப்பார்கள். நீங்களும் […]

You May Like