கல்யாணமே வேண்டாம் என்று அடம் பிடித்து முரட்டு சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜிக்கு திருமணம் நடந்த நிலையில், அவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது
பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர், சென்னை 28 படத்தில் காமெடி நடிகராக நடித்திருந்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததை விட, தனது சகோதரனான வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி படங்கள் பிரேம்ஜிக்கு அதிக பெயரை பெற்றுக் கொடுத்தது.
தற்போது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கி G.O.A.T படத்திலும் பிரேம்ஜி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். 44 வயதான பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே சுற்றி வந்தார். ஆனால், தற்போது அவர் இந்து என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். அவர்களுக்கு இன்று திருத்தணியில் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
Read More : வட்டியில்லா கடன் வழங்கும் மத்திய அரசு..!! 50% மானியமும் இருக்கு..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?