குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இந்திய ராணுவத்தினருடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகையானது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் கட்ச் கழிமுகப் பகுதியில் உள்ள லக்கி நாலாவில் எல்லைப் பாதுகாப்புப் படை, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த துணிச்சல் மிக்க வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.
விருந்தோம்பல் இல்லாத இடங்களில் உறுதியாக நின்று நம்மைப் பாதுகாக்கும் நமது பாதுகாப்புப் படையினர் குறித்து நாம் மிகவும் பெருமை கொள்கிறோம் என்று பிரதமர் கூறினார். கட்ச் கழிமுகப் பகுதி அதிக வெப்பநிலை காரணமாக சவாலானதாகவும், தொலைதூரமாகவும் உள்ளது. இது மற்ற சுற்றுச்சூழல் சவால்களையும் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். கழிமுகப் பகுதியில் மிதக்கும் எல்லை புறக்காவல் முகாம் ஒன்றிற்குச் சென்ற பிரதமர் மோடி, துணிச்சல் மிக்க பாதுகாப்புப் படையினருடன் இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.