எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 20ஆம் தேதி சென்னை வருகிறார்.
சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் சென்னை-எழும்பூர் ரயில் நிலையத்தில் மத்திய அரசின் திட்டங்கள் உட்பட பல்வேறு ரயில்வே தொடர்பான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ இன்று அல்லது நாளை வெளியாகலாம். சமீபத்தில் மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி தென் மாநிலத்திற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல்துறை தொடங்கியுள்ளது. பல்வேறு மாநில ரயில்வே திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 6 வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை-கோவை, சென்னை-திருநெல்வேலி, சென்னை-மைசூரு, கோயம்புத்தூர்-பெங்களூரு மற்றும் சென்னை-விஜயவாடா வழித்தடங்கள் அடங்கும். மேலும், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது.