fbpx

Agri Budget 2025 | அதிக விளைச்சல் காட்டும் முதல் 3 விவசாயிகளுக்கு பரிசு.. என்னென்ன சலுகை தெரியுமா..? – அமைச்சர் சொன்ன குட் நியூஸ்

தமிழக வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செங்கோல் ஆட்சியில் தொழில்கள் பெருகி பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2வது இடம் பிடித்துள்ளது. விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிக்கப்பட்டுள்ளது. உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்பிகிறேன் என  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும்..

* 1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். இதனை அமைக்க 30 சதவீத மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* டெல்டா அல்லாத 29 மாவட்டங்களில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க சிறப்புத் தொகுப்புக்காக ரூ.102 கோடி ஒதுக்கீடு.

* நெல் விதை மானியத்திற்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு.

* மலை வாழ் உழவர் முன்னேற்றத் திட்டம் – மானியம் வழங்க ரூ.22.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.

* நிலமற்ற விவசாயிகளுக்கு விபத்து மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.

* பட்டியலின விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 70 சதவீதமாக உயர்த்தப்படும்.

* எள், சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துகள் சாகுபடியை மேம்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* அதிக விளைச்சல் காட்டும் முதல் 3 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசாக ரூ.2.5 லட்சம், 2-வது பரிசாக ரூ.1.5 லட்சம் மற்றும் 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

* மாற்றுப் பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.

* மக்கா சோளம் சாகுபடி மூலம் உழவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்க செய்யும் வகையில் மக்காச் சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 79 ஆயிரம் உழவர்கள் பயனடையும் வகையில் சுமார் 40 கோடியை 25 லட்சம் ஒன்றிய மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம் அறிவிப்பு.

* மக்காச்சோளம் உற்பத்தியை அதிகரிக்க ரூ.40 கோடியில் திட்டம்.

* இயற்கை வேளாண்மை ஊக்குவிக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு.

* இயற்கை வேளாண்மை பொருட்களை சந்தைப்படுத்த பூமாலை வணிக வளாகம் மூலம் நடவடிக்கை.

* பள்ளி மாணவர்களுக்கு வேளாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

* 38600 மாணவர்கள் வேளாண் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

Read more: TN Agri Budget | பட்டியலின விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் 70% ஆக உயர்வு ..!! – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

English Summary

Prizes will be awarded to the top 3 farmers with the highest yields.

Next Post

BREAKING | பவர் டில்லர், இயந்திர கருவிகள் வாங்க மானியத் தொகை உயர்வு..!! எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு..!!

Sat Mar 15 , 2025
Agricultural machinery and tools will be provided to 17,000 farmers at subsidized rates.

You May Like