fbpx

நாளை கரையை கடக்கும் “மோக்கா” புயல்…! 175 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்…! வானிலை மையம் எச்சரிக்கை…!

தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய “மோக்கா” புயலானது 11-ம் தேதி மாலை 5.30 மணி அளவில்‌ தீவிர புயலாக வலுப்பெற்று வடக்குத்‌ திசையில்‌ நகர்ந்து நேற்று காலை 5.30 மணி அளவில்‌ மிகத்தீவிரப்‌ புயலாக மத்திய மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ போர்ட்‌ பிளேயரில்‌ இருந்து சுமார்‌ 530 கிலோ மீட்டர்‌ மேற்கு -வடமேற்கே நிலைகொண்டுள்ளது.

இதுவடக்கு – வடகிழக்குத்‌ திசையில்‌ நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ மேலும்‌ வலுப்பெற்று நாளை நண்பகல்‌, தென்கிழக்கு வங்கதேசம்‌ மற்றும்‌ வடக்கு மியான்மர்‌ கடற்கரையை கடக்கக்கூடும்‌. அப்போது காற்றின்‌ வேகம்‌ 150 முதல்‌ 160 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 175 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை...! தமிழகம் மற்றும் மேற்குவங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்...!

Sat May 13 , 2023
தி கேரளா ஸ்டோரி பட தடை விவகாரத்தில் ஏன் தியேட்டருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதா..‌? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் 17-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ” தயாரிப்பாளர்கள் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி […]

You May Like