ராஜ்யசபா எம்.பி கர்ணேந்து பட்டாச்சார்ஜி காலமானார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும், சில்சார் தொகுதியில் இருந்து இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்ணேந்து பட்டாச்சார்ஜி, வயது தொடர்பான சிக்கல்களால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று புது டெல்லியில் உள்ள மருத்துவமனையில் காலமானார். 84 வயதான அவருக்கு நந்தினி பட்டாச்சார்ஜி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
மூத்த அரசியல்வாதியின் மறைவுக்கு முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:மூத்த காங்கிரஸ் தலைவர், முன்னாள் எம்.பி கர்னேந்து பட்டாச்சாஜியின் மறைவு வருத்தமளிக்கிறது. அசாமின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவருடனான எனது தொடர்பை அன்புடன் நினைவு கூர்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.