fbpx

ராமர் கோயில் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு… உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை…!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கவில்லை, என்று கூறி, தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க‌ தரப்பில் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கருவறை மற்றும் ஐந்து மண்டபங்கள் உட்பட ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த கோயில் இன்று திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி ராமர் கோயிலை திறந்து வைக்கும் நிலையில் இந்த கோயிலில் குழந்தை வடிவ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

அயோத்தி ராமர் நிகழ்ச்சி கோவில்களில் சிறப்பு ஒளிபரப்பு செய்யக்கூடாது என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியது. இதற்கு எதிராக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்வாக சீதாராமன் உள்ளிட்டோ இருக்கட்டும் கண்டனங்களை தமிழக அரசுக்கு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இது தொடர்பாக பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கவில்லை, என்று கூறி, தமிழக அரசுக்கு எதிராக பா.ஜ.க‌ தரப்பில் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வருகிறது.

Vignesh

Next Post

’ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள்’..!! ’சிறப்பு பூஜையை தடுத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வெடிக்கும்’..!! அண்ணாமலை எச்சரிக்கை..!!

Mon Jan 22 , 2024
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை பிரதமர் மோடி முன்னிலையில் இன்று நடைபெறவிருக்கிறது. இத்தகைய சூழலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜை செய்யவும், ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்யவும் தமிழ்நாடு அரசு தடை உத்தரவு போட்டிருப்பதாக நாளிதழ் செய்தியைக் குறிப்பிட்டு, திமுக அரசு செய்வது இந்து விரோத செயல் என கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, […]

You May Like