fbpx

ரெப்போ விகிதத்தில் தொடர்ந்து 10-வது முறையாக மாற்றமில்லை..!! – ரிசர்வ் வங்கி ஆளுநர் 

ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பகிர்ந்து கொண்ட அவர், ரெப்போ விகிதம் 6.5% ஆகவே தொடரும் எனத் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணய கொள்கை குழு (MPC) ரெப்போ விகிதத்தை 6.5% ஆக பராமரிக்கும் என இக்குழுவில் 6ல் 5 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் அடுத்த 2 மாதங்களுக்கு ரெப்போ விகிதம் தொடர்ந்து 6.5 சதவீதமாக இருக்கும், இதனால் வங்கிகளில் வீட்டுக் கடன், வாகன கடன் ஆகியவற்றின் மீதான வட்டி விகிதம் மாறாமல் இருக்கப்போகிறது. 2019 ஜூன் மாதத்தில் இருந்து முதல் முறையாக கொள்கை முடிவுகளை நடுநிலை ஆக மாற்றியுள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 6.5% இல் மாற்றாமல் தொடர்ந்து பத்தாவது கூட்டமாக அதன் 6.5 சதவீதம் என்ற நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. இருப்பினும், மத்திய வங்கி தனது நாணய கொள்கை நிலைப்பாட்டை “Withdrawal Of Accommodation” என்பதிலிருந்து நடுநிலை (Netural) க்கு மாற்றியுள்ளது அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்த ஒரு மாற்றம் எதிர்கால வட்டி விகித முடிவுகளில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரெப்போ வட்டி விகிதம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதங்களுக்கு இடையேயான கால கட்டத்தில் 250 அடிப்படை புள்ளிகள் உயர்ந்ததால் 6.5 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமின்றி நீடிப்பது இது 10-வது முறையாகும்.

Read more ; 12 ஆண்டுகளாக மிரட்டிய முன்னாள் காதலன்.. இளைஞன் மீது ஆசிட் வீசிய பெண்..!! பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?

English Summary

RBI keeps repo rate unchanged, hikes FY25 GDP growth forecast: Details here

Next Post

கிராமப் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம்..!! காட்டுக்குள் தொங்கிய சடலம்..!! பீதியில் மக்கள்..!!

Wed Oct 9 , 2024
They stopped the women, kidnapped them into the bush and raped them.

You May Like