fbpx

‘உங்கள் ப்ராவை கழற்றி டேபிளில் வைங்க..’ நீட் தேர்வின் கொடுமையான அனுபவத்தை பகிர்ந்த மாணவி..

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதும் முன் பல மாணவிகள் உள்ளாடைகளை கழற்ற வேண்டும் என்று கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ப்ராவை கழற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பலரில் இருந்த ஒரு மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்த மாணவி, “ கொல்லத்தில் உள்ள மையத்தில் நடத்தப்படும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு முன், அங்கீகரிக்கப்படாத பொருட்களைத் திரையிடும் போது மாணவர்கள் தங்கள் “ப்ராவைக் கழற்றி மேசையில் வைக்க வேண்டும் என்று கூறினார்கள்.. இதனால் மிகவும் சங்கடமான நிலை ஏற்பட்டது..

உங்கள் ப்ராவை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு புறப்படுங்கள், அணிய வேண்டிய அவசியமில்லை என்றார்கள். அதைக் கேட்டு நாங்கள் மிகவும் சங்கடப்பட்டோம். ஆனால் அனைவரும் மாற்றுவதற்காக காத்திருந்தனர். இருட்டாக இருந்தது, மாற்றுவதற்கு இடமில்லை. அது ஒரு பயங்கரமான அனுபவம். தேர்வு எழுதும் போது துப்பட்டா இல்லாததால் தலைமுடியை முன்னால் போட்டோம். மாணவர்களும், மாணவிகளும் இருந்தனர்.. அது மிகவும் கடினமாகவும் சங்கடமாகவும் இருந்தது, ” என்று தெரிவித்துள்ளார்..

நீட் உள்ளாடை சர்ச்சை இதுவரை என்ன நடந்தது..? மருத்துவ படிப்பில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. சுமார் 18 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். அந்தவகையில், கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு வந்த மாணவிகளின் உள்ளாடையை களைய சொல்லி சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நீட் தேர்வு எழுதிய மாணவியின் தந்தை ஒருவர் கொட்டாரக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.. அந்த புகாரில் மாணவர்கள் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) ஆடை கட்டுப்பாடு உள்ளாடைகளை அகற்றுவதை பரிந்துரைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்…

குறைந்தபட்சம் 90 சதவீத மாணவர்கள் பரீட்சைக்கு முன் தங்கள் உள்ளாடைகளை கழற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அவற்றை ஒரு ஸ்டோர் ரூமில் கொட்டும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் மாணவியின் தந்தை தனது புகாரில் கூறியிருந்தார்.. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பெண்களில் மூவர் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) பணியமர்த்தப்பட்ட ஏஜென்சியில் பணிபுரிந்தனர், இருவர் சம்பவம் நடந்த கொல்லத்தில் உள்ள ஆயூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது..

இந்த குற்றச்சாட்டை கவனத்தில் கொண்டு, கேரளாவில் உள்ள NEET (UG)-2022 மையங்களில் ஒன்றில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவம் பல்வேறு ஊடக அறிக்கைகள் மூலம் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் (MoE) தெரிவித்துள்ளது. அதன்படி, உண்மைகளை விரிவாகக் கண்டறிய NTA ஆல் உண்மையைக் கண்டறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தேசிய தேர்வு முகமை இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.. நீட் தேர்வின் போது அல்லது தேர்வு முடிந்த உடன் உள்ளாடை களைய சொன்னது தொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும், இது தொடர்பாக எந்த மின்னஞ்சலும் / புகாரும் பெறவில்லை என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

இலங்கையின் புதிய அதிபர் யார்..? நாடாளுமன்றத்தில் தேர்தல் தொடங்கியது..

Wed Jul 20 , 2022
இலங்கை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் தொடங்கி உள்ளது.. இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று போராடங்கள் மீண்டும் வலுப்பெற்றன.. இதையடுத்து தனது அதிகாரப்பூர்வ அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய […]

You May Like