fbpx

நிலத்தடி நீரில் கதிர்வீச்சு அபாயம்.. வடகொரியாவின் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்ட விபரீதம்…

அணு ஆயுத சோதனை தளத்திற்கு அருகில் உள்ள வட கொரிய நகரங்களில் நிலத்தடி நீர் கதிர்வீச்சு அபாயத்தைக் கொண்டுள்ளது மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது..

உலகின் மிகவும் ரகசியமான நாடாக கருதப்படும் வடகொரியா, பல்வேறு கடுமையான மற்றும் விசித்திரமான சட்டங்களை பின்பற்றி வருகிறது.. மேலும் அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது..அதன்படி 2006 மற்றும் 2017க்கு இடையே 6 அணு ஆயுத சோதனைகளை ரகசியமாக நடத்தி உள்ளதா அமெரிக்கா மற்றும் தென் கொரியா அரசுகள் தெரிவித்துள்ளது..

kim new

இந்நிலையில் இந்த அணு ஆயுத சோதனையால், அணு ஆயுத சோதனை தளத்திற்கு அருகில் உள்ள வட கொரிய நகரங்களில் நிலத்தடி நீர் கதிர்வீச்சு அபாயத்தைக் கொண்டுள்ளது மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.. சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் வடகொரியாவின் 8 நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் கதிரியக்கப் பொருட்கள் பரவியிருக்கலாம் என்று சியோலை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் குடிநீர், நிலத்தடி நீர் ஆபத்தில் இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.. சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் கதிர்வீச்சு அபாயத்தை எதிர்கொள்கின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

குழுவின் தலைவர் மற்றும் இணை ஆசிரியர் ஹூபர்ட் யங்-ஹ்வான் லீ இதுகுறித்து பேசிய போது “ வடகொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள் வட கொரிய மக்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் என்பதைக் காட்டுவதில் இந்த அறிக்கை முக்கியமானது, ஆனால் தென் கொரியா மற்றும் பிற அண்டை நாடுகளில் உள்ளவர்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது” என்று கூறினார்.

இந்த நிலையில் சீனாவும் ஜப்பானும் கதிர்வீச்சு கண்காணிப்பை அதிகரித்துள்ளன.. மேலும் பல வல்லுநர்கள் அசுத்தமான தண்ணீரால் ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.. ஆனால் வட கொரியா இந்த தகவல்களை நிராகரித்துள்ளது.. அணுசக்தி சோதனைகளில், தீங்கு விளைவிக்கும் பொருட்களின் கசிவுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது… எனினும் தற்போது 7-வது அணுகுண்டு சோதனைக்கு வடகொரியா தயாராகி வருவதாகக் தென் கொரியாவும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளன..

முன்னதாக 2015 ஆம் ஆண்டில், வடகொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முள்ளம்பன்றி காளான்களில் தரமான கதிரியக்கம் 9 மடங்கு இருந்ததை தென் கொரியாவின் உணவுப் பாதுகாப்பு நிறுவனம் கண்டறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

உக்ரைன் ரஷ்யா போர்…..! நிதி உதவி அறிவிப்பை வெளியிட்ட ஜப்பான்…..!

Tue Feb 21 , 2023
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. அன்று முதல் இன்று வரை இந்த போர் நடைபெற்று வருகிறது. ஆகவே உக்ரையினில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஒருபுறம் உக்ரைனை சத்தமே இல்லாமல் ரஷ்யா தன் வசம் கொண்டு வந்துவிட்டது என்று கூறப்படுகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் உக்கரைனுக்கு துணையாக நிற்கின்றன. […]
உக்ரைனுக்கு செல்லும் வாகனங்களை நிச்சயம் தாக்குவோம்..! ரஷ்யா எச்சரிக்கை

You May Like