Ibuprofen என்பது வலி நிவாரணி மருந்து ஆகும்.. பொதுவாக தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி, பல்வலி, தசை வலி மற்றும் மூட்டுவலி போன்ற வலிகளுக்கு இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மருந்து Combiflam, Flexion, Ibugesic Plus, Adiflam, Zupar மற்றும் Aimol என்ற பெயர்களில் கிடைக்கிறது. பொதுவாக நிபுணர் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின்றி மக்கள் பொதுவாக இந்த மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் மருத்துவர்களின் இந்த மாத்திரை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்வது உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தில் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்..
சர் கங்கா ராம் மருத்துவமனை மருத்துவர், ஸ்ரீஹரி அனிகிந்தி இதுகுறித்து பேசிய போது “ இது ஒரு ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு வகை மருந்து.. இந்த மருந்தை உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் ஒருவருக்கு அறிவுறுத்தும்போது, அதை கவனமாக பரிசோதித்து பின்னர் பரிந்துரைக்கின்றனர். ஆனால் மருத்துவரின் அறிவுரையின்றி Ibuprofen எடுத்துக் கொள்வது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். .
நமது குடலைப் பாதுகாக்க, அதன் சுவரில் மேலிருந்து கீழாக சளியின் அடுக்கு உள்ளது, இது துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனமான பொருட்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. நாம் Ibuprofen மருந்தை உட்கொள்ளும்போது, அந்த அடுக்கில் உள்ள ரசாயனங்கள் இந்த அடுக்கு உருக ஆரம்பிக்கும். இந்த சூழ்நிலையில், குடல் சுவர்களில் துளை ஏற்படுகிறது.
இதனால் குடலில் உணவை ஜீரணிக்க வெளியிடப்படும் என்சைம்கள் குறைக்கப்படுகின்றன. இதன் காரணமாக, குடல் சுவர் பாதுகாபாக இருக்காது. இரண்டாவதாக, செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகள் இருக்கும். குடலின் சுவரில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் நேரடி தாக்குதல் இருக்கலாம். குடலின் சுவர்களில் காயங்கள் ஏற்படலாம் மற்றும் வயிற்று வலி மற்றும் தலைவலி ஏற்படலாம்..” என்று தெரிவித்தார்..
மேலும் பேசிய அவர் “ Ibuprofen மாத்திரையால் ஏற்படும் மிகவும் பொதுவான அறிகுறி வயிற்றுவலி.. மற்றொரு அறிகுறி கருப்பு மலம். அப்படி இருந்தால், குடலில் இருந்து ரத்தம் வருகிறது என்று அர்த்தம். அரிதான சந்தர்ப்பங்களில், குடலில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது, பின்னர் குடலில் ஒரு அடைப்பு ஏற்படுகிறது. எனவே அவசரமாக தேவைப்படும் போது மட்டுமே Ibuprofen எடுக்க வேண்டும். இது ஒரு குறுகிய காலத்திற்கு எடுக்கப்பட வேண்டும். இந்த மருந்தை அதிகபட்சம் 5-7 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 5 நாட்களுக்கு மேல் தேவைப்பட்டால், மருத்துவரை அணுகவும்..” என்று தெரிவித்தார்..