நம்முடைய செய்தி நிறுவனத்தில் நாள்தோறும், பல்வேறு துறைகளில் இருக்கக்கூடிய வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளோம்.
இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் நிறுவனம் junior assistant பணிகளுக்கான காலி பணியிடங்களை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான வலைதளத்தில், இது தொடர்பான முழுமையான விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பணிக்கு 16 காலி பணியிடங்கள் இருக்கின்றன. ஆகவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் மூலமாக இன்று முதல் வரும் செப்டம்பர் மாதம் நான்காம் தேதி முடிவதற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கு 1-8- 2023 அன்று தேதியின்படி விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது அதிகபட்சமாக 30க்குள் இருக்க வேண்டும். அதோடு, வயது தளவு தொடர்பான விவரங்களை அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால், அங்கீகாரம் வழங்கப்பட்ட, கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலே சொல்லப்பட்ட மத்திய அரசு பணியில் அமர ஆர்வமுள்ள நபர்கள், நேர்காணல் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 20,000முதல், 66000 வரையில் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள், கீழே கொடுக்கப்பட்டிருக்கின்ற இணைப்பின் மூலமாக இந்த பணிக்கு அறிவிப்பு வெளியான நாள் முதல் வரும் செப்டம்பர் மாதம் நான்காம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.