fbpx

#தூத்துக்குடி: லாரியில் இருந்த கயிறானது எதிரே வந்த நபருக்கு எமனாகி விட்டது.. பதபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்..!

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள ஏரல் விவசாய நிலப் பரப்பில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக லாரிகளின் போக்குவரத்து இருந்து வருகிறது. இதனிடையில் விவசாய உரங்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியில், மூட்டைகள் இறுக்கமாக கயிறு கொண்டு கட்டப்பட்டிருந்தது. 

ஏரல் பகுதிக்கு அருகே வந்த போது இதில் கட்டப் பட்டிருந்த கயிறானது அவிழ்ந்து உரமூட்டைகள் கீழே விழுந்துள்ளது. அச்சமயத்தில் அந்த வழியாக வந்த ஆழ்வார்திருநகரில் வசித்து வரும் 30 வயதான சங்கரசுப்புவின் மகனான முத்து என்பவர் எதிரே பைக்கில் வந்து கொண்டிருந்துள்ளார்.

லாரியில் இருந்து உரமூட்டையுடன் கீழே விழுந்த கயிறானது முத்துவின் கழுத்தில் சுற்றிக் கொண்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் முத்து பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் அவர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். 

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவமானத்தின் வீடியோவானது அங்கு சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த சிசிடி கேமராவில் பதிவாகியுள்ளது . மேலும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. 

Baskar

Next Post

மக்களே உஷார்..!! விற்பனையில் உள்ள இந்த 83 மருந்துகளும் தரமற்றவை..!! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

Fri Dec 16 , 2022
‘நாட்டில் விற்பனையில் உள்ள 83 மருந்துகள் தரமற்றவை’ என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளும், மத்திய-மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. அதேபோல், போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பரில் 1,487 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி, கால்சியம், ஜீரண மண்டல பாதிப்புக்கு […]

You May Like