fbpx

செம வாய்ப்பு…! பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.5,000 பரிசு..‌ உடனே இதை செய்ய வேண்டும்…!

சேலம் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித்துறையால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அவ்வறிப்பிற்கிணங்க சேலம் மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் பிறந்தநாளுக்கான பேச்சுப்போட்டிகள் முறையே 22.10.2024, 23.10.2024 மற்றும் 24.10.2024 ஆகிய நாள்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி சேலம்8, அரசுக் மகளிர் கலைக் கல்லூரியில் போட்டிகள் காலை 9.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000/, இரண்டாம் பரிசாக ரூ.3000/-. மூன்றாம் பரிசாக ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழும் மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். எனவே சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் முறையாக போட்டி நடைபெறும் நாளன்று நேரில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Rs.5,000 prize for school and college students.

Vignesh

Next Post

வடகிழக்கு பருவமழை... இதை உடனே செய்து முடிக்க வேண்டும்..‌ தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு...!

Sun Oct 6 , 2024
Trees and branches affecting the safety of students should be cut and removed.

You May Like