பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்கள் 2012-13 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மற்றும் நகராட்சி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு தோற்றுவிக்கப்பட்ட 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஜூலை 2023 முதல் டிசம்பர் 2023 முடிய ஆறு மாத காலத்திற்கு ஊதியக் கொடுப்பாணை ( Pay Authoritation ) வெளியீடு.
900 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஜுலை 2023 முதல் டிசம்பர் 2023 முடிய ஆறு மாத காலத்திற்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான ஜுலை 2023முதல் டிசம்பர் 2023 மூடிய ஆறு மாத காலத்திற்கு சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில் ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.