பேங்க் ஆஃப் இந்தியா (BOI) வங்கி, ப்ரோபேஷனரி அதிகாரி பதவிக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை முடிக்க உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் bankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 25 ஆகும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் வங்கியில் உள்ள 500 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அவற்றில் 350 பொது வங்கி பிரிவில் கிரெடிட் ஆபீசர் பணிகளுக்கும், 150 காலியிடங்கள் ஐடி அதிகாரி பதவிக்கும் சிறப்புத் தேர்வில் உள்ளன. .
ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு ஸ்கேல்- Iக்கான ஊதிய அளவு ரூ. 49,910 முதல் ரூ.63,840 வரை..
BOI அறிவிப்பில், “பொது/EWS பிரிவினருக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 40% ஆக இருக்கும். SC/ST/OBC/PWD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட காலியிடங்களை நிரப்பினால், பொது/EWS பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களுடன் 5% தளர்வு கிடைக்கும். வங்கி தனது விருப்பப்படி குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை மாற்றலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 20 முதல் 29 வரை இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: GENERAL/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 850 செலுத்த வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 175.
விண்ணப்பிப்பதற்கான படிகள்
- bankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
- career என்ற டேபை கிளிக் செய்யவும்
- “Recruitment of Probationary in JMGS-I upon passing Post Graduate Diploma in Banking & Finance(PGDBF) Project No. 2022-23/3 Notice dated 01.02.2023” என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களைப் பதிவு செய்து தொடரவும்
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்
- தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றவும்
- Submit மற்றும் எதிர்காலத்திற்காக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.